16th March 2022 20:37:43 Hours
கொமர்ஷல் வங்கியின் அனுசரணையுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 571 வது பிரிகேட் படையினரால் கிளிநொச்சி சன சமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அப்பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அநாதரவான முதியோர்களின் பார்வை குறைபாடுகள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு சனிக்கிழமை (12) பயனாளிகளுக்கு 150 மூக்கு கண்ணாடிகள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
571 பிரிகேட் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கொமர்ஷல் வங்கியின் பீடி செபஸ்டியன் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் திட்டத்திற்கான நிதி உதவியை வழங்கியிருந்தது.
இரண்டு கட்டங்களின் கீழ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் வைத்தியர்கள் முன்னிலையிலான பரிசோதனையின் பின்னர் கண்ணாடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத் ஆகியோருடன் 57 வது படைப்பிரிவு மற்றும் 571 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.