Header

Sri Lanka Army

Defender of the Nation

16th March 2022 20:57:25 Hours

முதலாம் படையணியின் தளபதி கடமைகளிலிருந்து விடுகை

முதலாம் படையணியின் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதையிட்டு கிளிநொச்சியிலுள்ள முதலாம் படையணியின் தலைமையகத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் போது தனது கடமைகளிலிருந்து விடுகை பெற்றுகொண்டார்.

இதன்போது வெளியேறும் தளபதிக்கு முதலாம் படையணியின் தலைமையக நுழைவாயில் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து 5 வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களால் கௌரவிப்புக்கான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஓய்வுபெறவுள்ள அதிகாரி விருந்தினர் பதிவேட்டில் தனது கடமைகளிலிருந்து விடுகை பெறுவது தொடர்பில் பதிவிட்டார். பின்னர் முதலாம் படையணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதன் பின்னர் முதலாம் படையணி தலைமையகத்தின் கட்டளையின் கீழவுள்ள தளபதிகள், படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ஓய்வுபெறும் முதலாம் படைத் தளபதி அவர்கள் ‘நெலும்பியச’ பல்செயல்பாட்டு மண்டபத்தில் படையினருக்கான உரையொன்றை நிகழ்த்தியிருந்ததோடு, அந்த உரையில், தனது 35 வருட நீண்ட சேவையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், சேவை காலத்தில் தமக்கு உறுதுணையாக இருந்த படையினருக்கு நன்றி தெரிவித்தார். அதேநேரம் அமைப்பின் நற்பெயரை பாதுகாக்கும் அதேவேளை, தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பின்னர் முதலாம் படையணி தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி அவர்களினால் ஓய்வுபெறவுள்ள, மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் அவர்களது சேவையை பாராட்டு தெரிவித்தும் முதலாம் படையின் தலைமையகத்தை நிறுவியமைக்காகவும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதலாம் படையணியின் கீழுள்ள படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டு சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துகொண்டனர். நிகழ்வில் நிறைவம்சமாக முதலாம் படையணியின் தளபதியவர்கள் தேநீர் விருந்துபசாரத்துடன் விடைபெற்றுக்கொண்டார்.