Header

Sri Lanka Army

Defender of the Nation

16th March 2022 20:51:17 Hours

தேசிய கனிஷ்ட பிரிவு படகோட்டும் போட்டி – 2022 ல் இராணுவத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்

தியவன்னாவ படகோட்டும் மையத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற தேசிய கனிஷ்ட பிரிவு படகோட்டும் போட்டிகள் – 2022 நிறைவடைந்துள்ளது.

முப்படையினர், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மொத்தம் 20 படகோட்டும் விளையாட்டுக் கழகங்கள் போட்டியில் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கை இராணுவ மகளிர் படகுப்போட்டும் அணி வெற்றி கிண்ணத்தையும் வென்றது. அதேபோன்று இலங்கை இராணுவ ஆண்கள் பிரிவு 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இலங்கை பொழுதுபோக்கு படகோட்டும் அமைப்பினரால் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கனிஷ்ட பிரிவின் வெற்றியாளர்கள் (ஆண்கள்)

3 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் சார்ஜண் ஈபீஎன் பிரசாத் இடை்டையர் மற்றும் தனிப்பிரிவு போட்டிகளில் - முதலாமிடம்

3 வது இலங்கை இராணுவ இயந்திரவியற் காலாட் படையின் கோப்ரல் பீஜீசீஎஸ் கருணாரத்னே (இரட்டையர்) – முதலாமிடம்

3 இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏஎஸ் ஹெட்டியராச்சி (நால்வர் பிரிவு) - முதலாமிடம்

10 இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூஎல்ஐஏ மதுசர (இரட்டையர் மற்றும் தனிப் பிரிவு) - இரண்டாமிடம்

14 வது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்எம்எஸ்எல் (நால்வர் பிரிவு) - முதலாமிடம்

20 வது கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.எச்.பீ.எல. பெர்னாண்டோ – (தனிநபர்) இரண்டாது இடம்

லான்ஸ் கோப்ரல் ஆர்.டி.கே.எஸ் வீரசிங்க (நால்வர் பிரிவு) முதலாமிடம்

2 வது இலங்கை இராணுவ இயந்திரவியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.டி.எஸ். கருணாரத்ன (இரட்டையர் மற்றும் நால்வர் பிரிவு ) இரண்டாம் மற்றும் முதலாமிடம்

7 வது இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் லான்ஸ் கோப்ரல் (இரட்டையர் பிரிவு) - இரண்டாமிடம்

2 வது இலங்கை பீரங்கிப் படையணியின் சிப்பாய் ஈகேஎஸ் ஹர்சன (நால்வர் மற்றும் தனி பிரிவுகள்) – 1 மற்றும் 2 ஆம் இடம்

17 வது கஜபா படையணியின் சிப்பாய் ஆர்எம்ஜீபி பண்டார (இரட்டையர் மற்றும் தனி பிரிவுகள்) – 2 மற்றும் முதலாமிடம்

கனிஷ்ட பிரிவு வெற்றியாளர்கள் (பெண்கள்)

4 வது இலங்கை இராணுவ புலனாய்வு படையணியின் கெப்டன் மஹேஷி லியனகே (இரட்டையர் மற்றும் தனி பிரிவுகள்) – முதலாமிடம்

5 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் சார்ஜண் பீபீடீஎஸ் வீரசிங்க (இரட்டையர் மற்றும் நால்வர் பிரிவு) முதலாமிடம்

2 வது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் சார்ஜண் எஸ்ஜீஎஸ்கே வீரகோண் – (தனி மற்றும் இரட்டையர பிரிவுகள்) முதலாமிடம்

11 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் டபிள்யூவீஎஸ்எல் லக்‌ஷானி – (நால்வர் பிரிவு) - முதலாமிடம்

11 இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் டீஐஎஸ் மெண்டிஸ் (நால்வர் பிரிவு) முதலாமிடம்

12 வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் சிப்பாய் ஜேஎச்எஸ் (தனி மற்றும் இரட்டையர பிரிவுகள்) 3 ம் மற்றும் முதலாமிடம்