Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2022 21:48:58 Hours

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சதுரங்க வீரர்களுக்கு பயிற்சி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் ஆலோசனைக்கமைய மார்ச் 7- 11 வரையான தினங்களின் ஐந்துநாள் சதுரங்க பயிற்சி நிகழ்வொன்று இடம்பெற்றது.

இராணுவ சதுரங்கக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தோட்டாவின் கண்காணிப்பின் கீழ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சதுரங்க பயிற்சிப்பட்டறையில் 22 வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

5 நாள் பயிற்சியின் நிறைவில் மாணவர்களிடையே சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 1வது இயந்திரவியல் காலாட்படையணியை சேர்ந்த சாதாரண சிப்பாய் ஜி.ஆர்.விதுரங்க 1வது இடத்தையும், 12வது கெமுனு ஹேவா படையணியின் சாதாரண சிப்பாய் ஆர்.எம்.டி.எஸ்.ரத்நாயக்க மற்றும் 3வது இலங்கை சமிக்ஞை படையணியின் சாதாரண சிப்பாய் ஜி.ஜி.எம்.டி.கிம்ஹான ஆகியோர் முறையே 2ம் மற்றும் 3ம் இடங்களையும் பெற்றனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சஷிக பெரேரா நிறைவுறை ஆற்றினார். இதன்போது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் கிண்ணங்களும் வழங்கப்பட்டதோடு, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.