Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2022 21:57:37 Hours

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் வீராங்கனை ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாதனை

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கோப்ரல் கே.எல். சச்சினி பெரேரா, கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தனது 3.65 மீற்றர் முந்தைய இலங்கை சாதனையை போட்டியின் இரண்டாவது சுற்றில் முறியடித்தார் மற்றும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.70 மீற்றர் என்ற புதிய இலங்கைக்கான சாதனையை படைத்ததோடு வரவிருக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை தடகள விளையாட்டு வீரர்களின் தெரிவுப் போட்டிகள் இராணுவ விளையாட்டு வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மார்ச் 10 - 11 ஆம் திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.