13th March 2022 19:07:09 Hours
இலங்கை நீர் விளையாட்டு குழுவினால் பலபிட்டிய கடற்கரையில் இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12வது தேசிய 5 கிலோமீற்றர் திறந்த நீச்சல் சாம்பியன்ஷிப் - 2022 போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் நீச்சல் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
15 விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 85க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இராணுவ நீச்சல் வீரர்கள் தொடர்ந்து 5ஆவது வருடமாக சாம்பியன பட்டத்தை வென்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இப்போட்டியில் ஆண்கள் அணி முதல் பத்து இடங்களில் எட்டு இடங்களை பிடித்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான இராணுவ தளபதியவர்களின் ஆசிர்வாதத்துடன் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமும் இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் இராணு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
இப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட வீரர்களின் விவரம் வருமாறு,
1வது இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் பி.டி ஷெஹான்
2வது இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சாதாரண சிப்பாய் ஐஎம் அபேரத்ன
3வது இடம் - இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.ஏ.எஸ் அபேசிங்க