Header

Sri Lanka Army

Defender of the Nation

19th March 2022 08:40:44 Hours

மாத்தளையில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட பூங்கா இராணுவ தளபதியவர்களினால் திறந்து வைப்பு

மாத்தளை நகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட மாத்தளை மாநகர சபைக்குச் சொந்தமான வீடி நாணயக்கார பூங்கா இன்று (13) காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வளங்களை கொண்டு 17வது இலங்கை பொறியாளர் சேவை படையணியினரால், மேற்படி பூங்காவின் 865 மீட்டர் நீளமான நடைபாதை புனரமைக்கப்பட்டது.

இன்று காலை 10.20 மணி சுப வேளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததோடு, மாத்தளை நகர சபை முதல்வர் சந்தனம் பிரகாஷ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உதய நாணயக்கார மற்றும் நகர அபிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவு பொருட்கள் வெளியேற்றம் மற்றும் துப்புரவு ஏற்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு சிறினிமல் பெரேரா ஆகியோரால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நிறைவில் புனரமைப்புச் செய்யப்பட்ட வீதியை மேற்பார்வை செய்த பிரதம விருந்தினர் தொழில்நுட்ப மற்றும் ஆளணி வளத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தித்தில் பணிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மாத்தளை பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்திற்கமைவாகவும் பிரதமரும் பொருளாதார கொள்கைகள் மற்றும் கலாசார அலுவல்கள, திட்ட அமுலாக்கல், புத்தசாசன அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுரைக்கமையவும் மேற்படி பூங்கா புனரமைப்புச் செய்து திறந்து வைக்கப்பட்டது.

மாத்தளையின் மிகவும் உல்லாசமான இடங்களில் ஒன்றாக கருதப்படும் வீடி நாணயக்கார பூங்கா இயற்கையான சூழலில் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குகிறது. மரங்களின் சலசலப்பு, பறவைகளின் ஓசைகள், இனிமையான காற்று என்பன இனிமையான அனுபவங்களை தருவனவாக அமைந்துள்ளன.

11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ, 111 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, மற்றும் 17 வது இலங்கை பொறியியலாளர் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.