Header

Sri Lanka Army

Defender of the Nation

12th March 2022 06:41:12 Hours

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஹோட்டல் நிர்வாகப் பணிகளை ஆய்வு

இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும், லாயா செயின் ஹோட்டலின் நிர்வாக அதிகாரியுமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் செவ்வாய்க்கிழமை (8) இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் லாயா செயின் ஹோட்டலின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த முதல் விஜயத்தின் போது ஹோட்டல்களின் செயற்பாட்டு அம்சங்கள் தொடர்பாக லாயா செயின் ஹோட்டலின் பிரதான செயற்பாட்டு அதிகாரி பிரிகேடியர் சித்ரால் குலதுங்க விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல தலைமையக வளாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்து பார்வையிட்டார்.

கேணல் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கேணல் அருணா ரோட்ரிகோ, மற்றும் லாயா ஹோட்டல் தலைமை அலுவலகத்தின் அனைத்து பிரிவுத் தலைவர்களும் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றினார்கள்.