12th March 2022 06:45:45 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது தேவையுடைய குடும்பங்களுக்கான வீடு நிர்மாணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மேலும் ஒரு வீட்டை நிர்மாணித்து வெள்ளிக்கிழமை (4) மஹகனதராவ, ரம்பாவ பிரதேசத்தில் வசிக்கும் 7 பிள்ளைகளின் விதவை தாயாருக்கு வழங்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க களுத்துறை போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் டாக்டர் பாக்யா வீரவர்தன தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நிதியுதவியுடன் இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கினார்.
இவ் நிகழ்வில் 211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன, 211 வது பிரிகேட் பணிநிலை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம்.கே.சி அமரகோன், 211 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மேஜர் ஆர்.எம்.எஸ்.ஜே ராஜநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.