12th March 2022 06:51:06 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் 515 வது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் காங்கேசன்துறை - பருத்தித்துறை வீதி ஊறணிப் பொதுப் பகுதியில் கண்டெடுத்த பணத்துடன் கூடிய பணப்பையினை செவ்வாய்க்கிழமை (8) உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
515 வது பிரிகேடில் கடமையாற்றும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் பணி நிலை சார்ஜன் கே.எச்.ஏ சமன் குமார தனது கடமைகளுக்காகச் சென்று கொண்டிருந்த போது வீதியோரத்தில் இருந்து இந்தப் பணப்பையினை கண்டெடுத்துள்ளார்.பின்னர், படையினர் அதன் உரிமையாளரான திக்கயவல் அல்வாய் வடமேற்கில் பகுதியைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் திரு கோணேஸ்வரமூர்த்தி திவியனேஷைக் கண்டுபிடித்து அவரது அடையாளத்தை உறுதிசெய்த பிறகு, தன்னியக்க வங்கி அட்டைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் பல விசிட்டிங் கார்டுகளுடன் ரூ.10,400.00 கொண்ட பணப்பை ஒப்படைத்தனர்.
அந்தப் பகுதி கிராம சேவை அலுவலருடன் கலந்து ஆலோசித்து உரிமையாளர் குறித்த தகவல் பெறப்பட்டது. சிப்பாயின் நேர்மை மற்றும் நடத்தைக்காக 51 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 515 வது பிரிகேட் தளபதி ஆகியோர் பாராட்டினர்.