Header

Sri Lanka Army

Defender of the Nation

12th March 2022 06:56:05 Hours

பதவி நிலைப் பிரதானி தொம்பகொட இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி தொழிற்சாலைக்கு விஜயம்

தொம்பேகொடவில் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் தொழிற்சாலையின் செயற்பாட்டு அம்சங்களைப் அறிந்து கொள்வதற்காக, இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, அண்மையில் தனது விஜத்தினை மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவ பதவி நிலைப் பிரானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்குவதற்கு முன்பதாக இராணுவத் தலைமையக போர்க்கருவி சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரஜித் விதானாச்சி மற்றும் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் தொழிற்சாலையின் நிலையத் தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது இராணுவ பதவி நிலைப் பிரதானி டயர் உற்பத்திக்கான பிரிவை உன்னிப்பாகக் கவனித்துடன், அதன் செயல்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விசாரித்தார். அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனர்களின் தொழில்நுட்ப அறிவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, உற்பத்திக்கான தரத்தை உயர்த்த அவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.