Header

Sri Lanka Army

Defender of the Nation

11th March 2022 10:16:53 Hours

தேசிய துப்பாக்கி சங்கத்தினரின் சர்வதேச உலோக நிழற்படச் சுடுதல் ஒன்றியத்தின் போட்டிகள் இப்போது நடைபெறுகிறது

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க தலைமையில் தேசிய துப்பாக்கி சங்கத்தின் சர்வதேச உலோக நிழற்படச் சுடுதல் போட்டிகளை பனாலுவ துப்பாக்கிச் சூட்டு களத்தில் திங்கட்கிழமை (7) ஆரம்பிக்கப்பட்டது.

முப்படை அணிகள், பொலிஸ் மற்றும் சிவில் அணிகள் பங்கேற்கும் உலோக நிழற்படச் சுடுதல் போட்டிகள் சனிக்கிழமை (12) வரையும், சர்வதேச நடைமுறை துப்பாக்கி சுடுதல் ஒன்றியத்தின் கை துப்பாக்கி (திறந்த) போட்டி வியாழன் (17) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) வரையும் நடைபெறும்.

மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க இலங்கை விமானப்படையிடமிருந்து இரண்டு வருட காலத்திற்கு 2021 மே மாதம் இலங்கையின் தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விஷேட அதிரடி படையினர் மற்றும் சிவில் பிரிவு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 துப்பாக்கி சூட்டு அணிகளை தேசிய துப்பாக்கி சங்கம் கொண்டுள்ளது.

சர்வதேச உலோக நிழற்படச் சுடுதல் ஒன்றித்தின் மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் போட்டிகளின் பரிசளிப்பு விழாக்கள் முறையே சனிக்கிழமை (12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) ஆகிய தினங்களில் நடைபெறும்.