Header

Sri Lanka Army

Defender of the Nation

07th March 2022 19:57:58 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி பல்லேகலை இராணுவ வைத்தியசாலை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்

பல்லேகலை 11 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய இராணுவ வைத்தியசாலையின் முன்னேற்ற பணிகளை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே வியாழக்கிழமை (3) பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது வைத்தியசாலை நிர்மாணப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள பொறியாளர் சேவைப் படையணியின் 172 வது அணி கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடல் ஒன்று வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், அதன் முன்னேற்றம் பற்றிய விபரங்களையும் பெற்றுக் கொண்டார். முறையான பராமரிப்பின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்கள் வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானியினை அவ்விடத்திற்கு வரவேற்று, வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வார்டுகள், பல் மருத்துவ பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை கூடம், சமையல்ப் பிரிவு, நிர்வாக அலுவலகம் போன்றவற்றைச் சுற்றி காண்பிப்பதற்காக அவருடன் சென்றார்.பொறியியலாளர் சேவைகள் பணிப்பாளர், இலங்கை இராணுவ போர்க் கருவிகள் பணிப்பாளர் நாயகம், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ விளையாட்டு துறை பணிப்பாளர், இலங்கை இராணுவ போர்க் கருவி பணிப்பக பணிப்பாளர் மற்றும் 11 வது படைப்பிரிவின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிர்மாணப் பணிகள் விரைவாக முடிவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் இடத்தினை பார்வையிட செல்லும் வழியில் மேஜர் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பல்லேகலையில் அமைக்கும் புதிய இராணுவ ஹொக்கி மைதானத்தின் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.