Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2022 15:00:57 Hours

வரலாற்று சிறப்புமிக்க 'தீகவாபிய'விற்கு கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் இரத்தின கலசங்கள்

அம்பாறை, வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாப்பிய ரஜமஹா விகாரையின் எண்கோண மூலைகளில் புனித சின்னங்கள் அடங்கிய எட்டு தங்கக் கலசங்கள் வைக்கும் சமய நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன உட்பட முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இன்று (6) இடம்பெற்றது.

சம்போதி விஹாரையின் முன்னாள் தலைமை தேரரும் 'பௌத்தயா’ தொலைக்காட்சி அலைவரிசை ஸ்தாபகருமான காலஞ்சென்ற வண. தரணகம குசலதம்ம நாயக்க தேரரின் 4 வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்தூபியின் மாணிக்கம் கலச மற்றும் தங்க கலசங்கள் புணரமைக்கப்பட்ட தீகவாப்பிய விகாரைக்கு வாகன ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. கிழக்கில் 'தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி' யின் கீழ் மகா தூபியின் புனரமைப்பு பணிகள் மகா சங்கத்தினரின் வழிகாட்டலின் கீழ் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அவர்களுக்கு ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட உத்தரவுகளின் பேரில் முன்னெடுக்கப்படுகின்றன.

தாய்வானின் பிரதம சங்க தேரர் வண. போதகம சந்தவிமல தேரர், வண. மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் பலர் சமய சடங்குகள் மற்றும் சடங்குகளை மேற்கொண்டதுடன், பல பிக்குகள் சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.