Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2022 16:50:32 Hours

பொலன்னறுவையில் ரணவிரு சங்கத்தின் வருடாந்த பொது கூட்டம்

பொலன்னறுவை மாவட்டத்தில் ரணவிரு சங்கம் (ரணவிரு சன்சதய), நாடு முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற, ஊனமுற்றோர் மற்றும் காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், தீர்வுகளை வழங்குவதற்குமான வருடாந்த பொது கூட்டத்தை மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடாத்தியது.

அந்த ‘ரணவிரு சன்சதய’ சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் அவர்களுக்கு இயன்ற வழிகளில் ஆதரவளிக்கும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது.

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமானது கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்னவினால் கண்காணிக்கப்பட்டது. வருடாந்த பொதுக்கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டதுடன், இதில் தமன்கடுவ, லங்காபுர, மெதிரிகிரிய, ஹிங்குராக்கொட மற்றும் எலஹெர பிரதேச செயலகப் பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது இராணுவத் தளபதியின் காணொளிச் செய்தியும் திரையிடப்பட்டது.