Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2022 17:50:32 Hours

இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் 1000 தென்னம் பிள்ளைகள் நடல் மற்றும் பல நலதிட்டங்களை ஆரம்பம்

இராணுவப் புலனாய்வுப் படையணி சுதந்திரத்தின் 75 வது வைர விழாவைக் குறிக்கும் வகையில் கரந்தெனிய படையணி தலைமையக வளாகத்தினுள் 1000 தென்னம் பிள்ளைகளை நடும் வேலைத்திட்டம் சனிக்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இராணுவப் புலனாய்வு படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நாட்டில் 500,000 தென்னம் பிள்ளைகளை நடும் தேசிய திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்துடன் சவக்கார உற்பத்தி அலகு, விளக்குமார் உற்பத்தி, கறுவா எண்ணெய், சிரட்டைக் கரி உள்ளிட்ட பல துணை திட்டங்களும் இராணுவப் புலனாய்வுப் படையணியினால் ஆரம்பிக்கப்பட்டன. தூய தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சிறிய தொழிற்சாலை மற்றும் முழுத் திட்டத்திற்கான மற்றுமொரு அலுவலகப் பிரிவும் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி அவர்களால் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் இராணுவப் புலனாய்வுப் படையணி படைத் தளபதி அந்த உற்பத்திப் பிரிவுகளுக்குச் சென்று அவற்றின் செயல்பாட்டு அம்சங்களைக் பார்வையிட்டார்.

இராணுவப் புலனாய்வுப் படையணி பிரதி படைத் பிரதித் தளபதி கேணல் ரவீந்திர குமார, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.