Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2022 18:50:32 Hours

'இராணுவ தளபதியின் சவால் கிண்ணம் - 2022' போட்டிகளுக்கு 25 வடக்கு காற்பந்து அணிகள் பங்கேற்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 22 ஆம் திகதி ஆரம்பமான 'இராணுவத் தளபதியின் சவால் கிண்ணம் - 2022' கால்பந்தாட்ட போட்டியில் வட மாகணத்தை சேர்ந்த சுமார் 260 வீரர்களை உள்ளடக்கிய 25 உதைபந்தாட்ட அணிகள் பங்கேற்றன. கிளிநொச்சி பொது மைதானத்தில் பெப்ரவரி 27 ஆம் திகதி நடைப்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் கிளிநொச்சி புனித மேரிஸ் அணியும் கிளிநொச்சி உதயசூரியன் அணியும் இறுதிப் போட்டியில் மோதத் தகுதி பெற்றன.

வடக்கில் காற்பந்தாட்டாத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளுக்காகவும் வடிவமைக்கப்பட்ட இந்தப் போட்டியானது, முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் வழிகாட்டுதலின்படி 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் யாழ் மாகாணத்தில் ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பமானதுடன் அரையிறுதிச்சுற்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றன. மேற்கூறிய இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி விரைவில் நடைபெற உள்ளது.கிளிநொச்சி பொது மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளை முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 57,59, 64, மற்றும் 66 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் கண்டுகளித்தனர்.