Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2022 19:50:32 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி கமாண்டே படையணி தலைமையகத்தில் நிர்வாக மதிப்பாய்வு

கமாண்டோ படையணியின் பொது நிர்வாக மதிப்பாய்விணை நேற்று வெள்ளிக்கிழமை (25) கனேமுல்ல கமாண்டோ படையணி தலைமையகத்தில் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவினால் நடத்தப்பட்டது.

இந்த நிர்வாக மதிப்பாய்வில் முக்கியமாக அதன் படையலகுகளின் செயல்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தியது மற்றும் ஏதேனும் குறைபாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள சிக்கல்கள் மற்றும் படைணி தலைமையகம் தொடர்பான விஷயங்கள் ஆகியன சீரமைக்கப்பட்டன. வருகைதந்த பதவி நிலை பிரதானி கமாண்டோ படையணி தலைமையக நுழைவாயிலில் கமாண்டோ படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன மற்றும் நிலைய தளபதி கேணல் கமல் தர்மவர்தன ஆகியோரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையிடலுடன் வரவேற்கப்பட்டார்.

இதன் போது முறையான நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன், பதவி நிலை பிரதானி நிர்வாக மதிப்பாய்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வெவ்வேறு பணியகங்களின் மற்றும் கிளைகளின் அந்தந்த பணியகங்களின் மற்றும் பணிநிலை அதிகாரிகள் தங்கள் அவதானிப்புகளை சமர்ப்பித்து, அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளை வகுத்தனர். கமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களுடன் அனைத்து கட்டளை அதிகாரிகள், பயிற்சி பாடசாலையின் தளபதிகள் மற்றும் கமாண்டோ படையணி தலைமையகத்தின் அனைத்து பணிநிலை அதிகாரிகள் நிர்வாக மதிப்பாய்வு கலந்துரையாடலில் பங்குபற்றினர்.