06th March 2022 07:19:55 Hours
தேசிய விளையாட்டு தேர்வுக்குழுவின் தலைவராக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலான விளையாட்டு போட்டிகளில் இராணுவத்தினரின் பங்களிப்பு இன்றியமையாததாகவும் புத்துணர்வுடன் கூடியதுமாக அமைந்துள்ளதோடு, இராணுவத்தின் “முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025” இன் இலக்குகளை எட்டும் விதமாகவும் அமைந்துள்ளது.
அதன்படி, கிரிக்கெட், கூடைப்பந்து, கரப்பந்து, கராத்தே, மோட்டார் பந்தயம், ரைடிங் மற்றும் டிரைவிங், பில்லியர்ட்ஸ், மல்யுத்தம், வலைப்ந்து, எல்லே, பூ பந்தாட்டம் , டேபிள் டென்னிஸ், வில்வித்தை, ஸ்குவாஷ், ரக்பி, கயிறு இழுத்தல், உயரம் பாய்தல், பேஸ்பால் மற்றும் பிற தடகளப் போட்டிகள் ஆகிய போட்டிகளில் கடந்த மூன்று மாதங்களில் (டிசம்பர்-பெப்ரவரி) அதிகளவு வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளதுடன் அந்த வெற்றிகளானது பெரும்பாலும் தேசிய அல்லது சர்வதேச நிகழ்வுகளில் சிவில் துறை விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகளுடன் போட்டியிட்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளதன் மூலம் இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சவாலை வெற்றிகொள்ளக்கூடிய வலிமை மிக்க வீரர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய, சனிக்கிழமை (26) பூகொட போதிராஜாராம பாடசாலை வளாகத்தில் பூகொட இரட்டை விளையாட்டுக் கழகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட கயிறுழுத்தல் சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இராணுவ ஆண்கள் (A மற்றும் B) & பெண்கள் அணிகள் இரண்டு முதல் இடத்தையும் , ஒரு இரண்டாம் இடத்தையும் மற்றும் ஒரு மூன்றாம் இடத்தையும் பிடித்துகொண்டுள்ளது. கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சிவில் பிரிவு அணிகள் உட்பட நாடளாவிய ரீதியில் 26 அணிகளை வீழ்த்தியே இந்த வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளது. அதேபோல், 640 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கல் போட்டிகளில் போட்டியிட்டு எதிரணிகளை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றியீட்டியதுடன் இலங்கை இராணுவ மகளிர் அணிகள் இதே போட்டியில் 560 கிலோ எடைப் பிரிவின் கீழ் 1 மற்றும் 2 ஆம் இடங்களைப் பெற்றன.தேசிய தடகள சங்கத்துடன் இணைந்து அமெரிக்க டெக்சாஸ், லுபோக்கில் உள்ள டெக்சாஸ் டெக் ஸ்போர்ட்ஸ் பெர்பார்மன்ஸ் சென்டரில் பெப்ரவரி 25 முதல் 26 வரை நடத்தப்பட்ட இன்டோர் லோன் ஸ்டார் உயரம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் சிப்பாய் எச்டியூ டி பெரேரா தனது சொந்த சாதனையை முறியடித்து 2.27 மீற்றர் என்ற புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
சிங்கப்பூரில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் - 2022 போட்டிகளில், இராணுவ பளுதூக்கும் வீரர்கள் (67 கிலோ) எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் (55 கிலோ) எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இப்போட்டிகளில் கொமாண்டோ படையணியின் சார்ஜெண் ஒருவரும், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையின் கோப்ரல் ஒருவரும் முறையே (67 கிலோ) எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் (55 கிலோ) எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். மேலும் அவர்கள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதிகளையும் பெற்றுக்கொண்டனர்.கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் நாட்டிலுள்ள பல முன்னணி கராத்தே அணிகளின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற இலங்கை கராத்தே பிரீமியர் லீக் – 2022 போட்டிகளில் 16 அணிகளை தோற்கடித்து இராணுவ அணி முதலிடத்தை பிடித்துக்கொண்டது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இராணுவ கிரிக்கெட் அணி வழ ங்கிவரும் பங்களிப்பு இன்றியமையாததாகும். அதன்படின கணிசமான எண்ணிக்கையிலான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை இராணுவம் உருவாக்கியுள்ளது. இதனால் பல வருடங்களாக இலங்கை தேசிய அணியுடன் நல்லுறவை பேணக்கூடியதாக இருப்பதோடு, அண்மையில் நடைபெற்ற மேஜர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி- 2021 (50 ஓவர்கள்) கொண்ட போட்டியில் பங்குபற்றி இராணுவ வீரர்கள் இறுதி அறை போட்டி வரை தெரிவுசெய்யப்பட்டு பிரகாசித்திருந்தனர்.அந்த வகையில் இராணுவ வீரர்களான மேஜர் சந்திமால் மற்றும் சாதாரண சிப்பாய் மகேஷ் தீக்ஷன ஆகியோர் இலங்கை தேசிய அணியை பிரதிநித்துவம் செய்கின்றமை சிறப்பம்சமாகும். மேலும் அதிகாரவாணையற்ற அதிகாரி - 1 சீக்குகே பிரசன்ன, பணிநிலை சார்ஜண் அசேல குணரத்ன ஆகியோரும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் வரிசையில் அடங்குவர். ( பெப்ரவரி 28) திங்கட்கிழமை மேஜர் கழகத்தினாள் வளர்ந்து வரும் வீரர்களுக்காக நடத்தப்பட்ட 3-நாள் கிரிக்கெட் போட்டி -2022 இல், இராணுவ கிரிக்கெட் கழக போட்டியாளர்கள் ஏஸ் கேபிடல் கிரிக்கெட் கழகத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
இராணுவ ரக்பி வீரர்களுக்கு நிகராக இராணுவத்தின் உதைபந்தாட்ட வீரர்களும் தங்களுக்கென தனியொரு இடத்தை பிடித்துகொண்டுள்ளனர். குறிப்பாக இலங்கை இராணுவ பாதுகாப்பு உதைபந்தாட்ட கழகம் தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்துள்ளதுடன் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில் இராணுவ பாதுகாப்பு உதைபந்தாட்ட கழகத்தில் உள்ள நான்கு வீரர்கள் தற்போது இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, அவர்களது பயிற்சியாளர்கள் இராணுவத்தின் ஆதரவுடன் வீரர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அதேநேரம் இராணுவத்தின் உதைபந்தாட்ட வீரர்கள் சவால் மிக்க கழக அணிகளுடன் போட்டியிட்டு பெற்றுகொண்ட வெற்றிகள் குறிப்பிட்டு கூறத்தக்கதாக அமைந்துள்ளதோடு, அவர்களது கடந்த கால முன்னேற்றமும் பாராட்டுக்குரியதாகும்.
மேலும், சக்கர நாற்காலியில் செல்லும் இராணுவ வீரர்களால் பதிவு செய்யப்பட்ட சாதனைகளும் குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி செவ்வாய்க்கிழமை (1) நீர்கொழும்பில் நடைபெற்ற 10 வது திறந்த சர்வதேச சக்கர நாற்காலி போட்டியின் போது ஆடவர் திறந்த ஒற்றையர் பிரிவில் இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜென்ட் டி.எஸ்.ஆர் தர்மசேன வெற்றி பெற்றார். இதேபோல் கடந்த நாட்களில் சக்கர நாற்காலி டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்குபற்றி நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், பல மத்திய ஆசிய நாட்டு அணிகளை வெற்றிகொண்டுள்ள இராணுவ பீச் போல் வீரர்கள் நீர்கொழும்பு கடற்கரையில் ஈரானிய அணியுடன் நடைபெற்ற பீச் போல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். மறுமுனையில் , மாத்தறை - எலியகந்த மோட்டோகிராஸ் தடத்தில் நடைபெற்ற தெற்கு 'எலியகந்த ஸ்பீட் ஹில் க்ளைம்ப்' மோட்டோகிராஸ் 26 வது அத்தியாயத்தின் SM-SuperMotard 250/450 cc நிகழ்வில் இராணுவ பொலிஸ் படையிணியின் லான்ஸ் கோப்ரல் இரண்டாம் இடத்தை பிடித்துகொண்டார். இந்த போட்டி “ஸ்ரீலங்கா ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ்” மற்றும் தெற்கு மோட்டார் கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடத்தப்பட்டதோடு, 600 மீ சுற்றளவு கொண்ட குறித்த போட்டியில் 13 சுற்று மோட்டார் சைக்கிள் போட்டிகள் மற்றும் 15 சுற்று கார் பந்தய போட்டிகள் இடம்பெற்றதோடு இதில் 120 சாரதிகள் மற்றும் 94 ரைடர்களும் போட்டியிட்டனர். நாடளாவிய ரீதியிலுள்ள சிவில் மற்றும் இராணுவ கூடைப்பந்து அணிகளின் பங்குபற்றுதலுடன் சுகததாச மைதானத்தில் ( பெப்ரவரி 14-20) ஆம் திகதிகளில் நடைபெற்ற 53 வது தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை இராணுவத்தின் கூடைப்பந்து அணி 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதட் தடவையாக இரண்டாம் இடத்தைப் பிடித்ததுக்கொண்டது. மெர்கன்டைல் கூடைப்பந்து அணிக்கும் இலங்கை இராணுவ கூடைப்பந்தாட்ட அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (20) விறுவிறுப்பாக இடம்பெற்றது.
அதேபோல், 2022 ஜனவரி 22-23 காலப்பகுதியில் மஹரகம தேசிய இளைஞர் பேரவை உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் இலங்கை இராணுவ மல்யுத்த வீரர்களின் அணி 2 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 - வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளின் போது கடற்படை மற்றும் விமானப்படை அணிகள் உட்பட நாட்டின் 10 முன்னணி விளையாட்டு கழக அணிகளுக்களுடன் இராணுவ அணி போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டி திகன மைதானத்தில் இலங்கையின் 32 முன்னணி வலைப்பந்தாட்ட சங்கங்களின் பங்கேற்புடன் 2022 ஜனவரி 22-23 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேசிய வலைபந்தாட்ட சாம்பியன்ஷிப் - 2021 போட்டி நிகழ்வில், இராணுவ மகளிர் அணி 3வது இடத்தை சுவீகரித்துக்கொண்டது.அதேபோன்று, இலங்கை இராணுவ எல்லே அணி 2022 ஜனவரி 23-25 ஆம் திகதி அம்பாறை மாவட்ட பொது மைதானத்தில் விளையாடிய அரச துறை நிறுவனங்களுக்கு இடையிலான எல்லே போட்டி - 2022 இல் சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ எல்லே அணியும் ஜா-எல பிரதேச சபை அணியும் மோதின. இந்த போட்டியில் இராணுவ அணி உட்பட இருபது அணிகள் பங்குபற்றின.
மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, பங்களாதேஷின் டாக்காவில் உள்ள ஷஹீத் தாஜுதீன் அகமது உள்விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெற்ற ‘யோனெக்ஸ் சன்ரைஸ் பங்களாதேஷ் இன்டர்நேஷனல் சேலஞ்ச்-2021’ பூப்பந்து போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இலங்கை இராணுவ பூப்பந்து வீரர்கள் இந்திய இராணுவ அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர்.இறுதி போட்டியியல் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் இரண்டு இலங்கை இராணுவ பூப்பந்து வீரர்களும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் ஒருவரும் கலந்துகொண்டனர். இதில் இந்தியா, மலேசியா, மாலைதீவு, வங்களாதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, ஜாம்பியா, சிம்பாப்வே, இலங்கை உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
2021 டிசம்பரில் நடைபெற்ற தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி - 2021 இல் போட்டியிடும் இராணுவ வில்வித்தை அணிக்கு தேசிய நிகழ்வில் நான்கு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் அவர்களின் வெற்றிகளைப் பாராட்டி வழங்கப்பட்டது.சமீபத்தில் முடிவடைந்த 16 வது தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப்-2021 போட்டியில் கலந்து கொண்ட இராணுவ வீரர்கள் ஆண்கள்/பெண்கள் பிரிவுகளில் 37 முன்னணி விளையாட்டுக் கழகங்களை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினர். இந்த போட்டி தேசிய கயிறு இழுத்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. மேலும், இலங்கை இராணுவத்தின் 7 அணிகளும் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றியதுடன், இந்த வருடத்தின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றது.
அண்மையில், நாடளாவிய ரீதியில் பல அணிகள் பங்குபற்றிய இலங்கை பேஸ்போல் நொக் அவுட் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஆண் மற்றும் பெண்கள் பேஸ்போல் அணிகள் சம்பியன்ஷிப்பை வென்றன. அதே போல், இராணுவ டேபிள் டென்னிஸ் வீரர்கள் சமீபத்திய தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்(35 வயது-இரட்டை) சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
கடந்த கோடைகாலத்தில் இராணுவத்தின் சார்ஜென்ட் (ஓய்வு) தினேஷ் பிரியந்த 67.79 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஆடவருக்கான F46 பிரிவில் புதிய உலக சாதனை படைத்து, 30 ஓகஸ்ட் 2021 அன்று ஒலிம்பிக் மைதானத்தில் நடந்த பாராலிம்பிக்ஸில் இலங்கையின் முதல் தங்கத்தை வென்றார். ஜப்பானில். டோக்கியோவில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் நடுவராக பணியாற்ற லெப்டினன்ட் கேணல் டி.எம்.டி.சி தசநாயக்க பணியாற்றினார்.டோக்கியோவில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் நடுவராக லெப்டினன்ட் கேணல் டி.எம்.டி.சி தசநாயக்க பணியாற்றினார்.இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரி, ஒலிம்பிக்கில் இலங்கையில் இருந்து துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட முதலாவது நடுவராக வரலாற்றில் இணைந்தார், இது இராணுவத்திற்கும் நாட்டுக்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற கௌரவமாகும்.