28th February 2022 19:39:39 Hours
அமெரிக்க டெக்சாஸ், லுபோக்கில் உள்ள டெக்சாஸ் டெக் ஸ்போர்ட்ஸ் பெர்பார்மன்ஸ் சென்டரில் பெப்ரவரி 25 முதல் 26 வரை நடைபெற்ற இன்டோர் லோன் ஸ்டார் உயரம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் சிப்பாய் எச்டியூ டி பெரேரா தனது சொந்த சாதனையை புதுப்பித்துள்ளார்.
அவர் முன்னர் உயரம் பாய்தலில் 2.26 மீட்டர் பாய்ந்து சாதனையை பதிவு செய்திருந்ததோடு, மீண்டும் அவர் 2.27 மீட்டர் பாய்ந்து அவரது சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
லோன் ஸ்டார் கான்பரன்ஸ் (LSC) என்பது தேசிய கல்லூரி தடகள சங்கம் பிரிவு II இன் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ள கல்லூரி மட்டத்திலான தடகள போட்டிகளாகும். உறுப்பு நிறுவனங்களானது தென்மேற்கு ஐக்கிய அமேரிக்காவிலுள்ள டெக்சாஸ், ஓக்லஹோமா, நியூ மெக்சிகோ மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய பகுதிகளில் பாடசாலைகளுடன் அமைந்துள்ளன.
பசிபிக் வடமேற்கின் ஒரிகன், வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கனேடிய மாகாணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மூன்று பாடசாலைகள் 2022 இல் உதைபந்தாட்ட உறுப்பினர்களாக மட்டுமே செயற்படும்.