Header

Sri Lanka Army

Defender of the Nation

28th February 2022 19:42:14 Hours

லெபனானில் அமைதிகாக்கும் கடமைகளுக்கான இறுதி குழு லெபனான் பயணம்

இலங்கை இராணுவத்தின் 13 ஆவது பாதுகாப்பு குழு (FPC) லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக 2 அதிகாரிகள் மற்றும் 48 சிப்பாய்கள் அடங்கிய இரண்டாவது குழு ஞாயிற்றுக்கிழமை (27) வாழ்த்துக்களுக்கு மத்தியில் லெபனானுக்கு புறப்பட்டது.

இராணுவத் தளபதியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், அவர்களை லெபனானுக்கு அழைத்துச் செல்வதற்காகவும் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படைத் தளபதியும் பிரதிப் பதவிநிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு விமான நிலையம் சென்றிருந்தார்.

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை (UNIFIL) தலைமையகமான நகோரா, லெபனான் மற்றும் விஷேட பிரமுகர்களின் தேவைக்கேற்ப பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை படைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

லெபனான் இலங்கைப் படை பாதுகாப்பு குழுவிற்கான இராணுவத்தின் 13 வது குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்கள்உள்ளதுடன் முதல் முறையாக ஒரு பெண் அதிகாரி மற்றும் 7 பெண் சிப்பாய்கள் உள்ளனர். இந்தக் குழு முக்கியமாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புறப்பாடு இரண்டு கட்டங்களில் இடம்பெற்றது.

8 அதிகாரிகள் மற்றும் 67 பேர் கொண்ட முதல் குழு அமைதி காக்கும் பணிக்காக பெப்ரவரி 5 ஆம் தேதி புறப்பட்டது. முதல் குழு தீவை விட்டு லெபனானுக்கு புறப்படுவதற்கு முன்னர், பனாகொடவில் இடம்பெற்ற விசேட அணிவகுப்பில் இராணுவத் தளபதிக்கு சம்பிரதாயபூர்வமாக மரியாதை செலுத்தினர்.