Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2022 19:00:04 Hours

நாடளாவிய மையங்களில் சேதன பசளை பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள்

பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்களின்படி சேதன பசளைகளைப் பயன்படுத்துவது தொடர்பான மேலும் ஒரு விழிப்புணர்வு அமர்வு வியாழக்கிழமை (24) 11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவவின் அழைப்பின் பேரில் மினிபே பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடலில் போது விநியோகம் மற்றும் சேதன உரங்களின் பயன்பாடு ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் இந்நிகழ்வில் மினிப்பே பிரதேச செயலாளர், கமநல அதிகாரிகள், முதலாவது இலங்கை துவக்கு படையணியின் கட்டளை அதிகாரி கேணல் ஆர்.எம்.எச் ஜயதிஸ்ஸ, மற்றும் மினிப்பே பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 100 விவசாயிகள் கலந்து கொண்டனர்.