27th February 2022 19:04:31 Hours
அடிப்படை எயார்மொபைல் பாடநெறி எண் - 24 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த விசேட படையணியின் 6 அதிகாரிகள் மற்றும் 324 சிப்பாய்கள் புதன்கிழமை (23) நிகவெவ எயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற முறையான வெளியேற்றல் அணிவகுப்பின் போது மதிப்புமிக்க சின்னத்தைப் பெற்றனர்.
அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கு நுழைவாயிலில் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் அணிவகுப்பு மரியாதை வழங்கியதனையடுத்து 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்கள் எயார்மொபைல் பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ரமேஷ் மங்கள அவர்களுடன் இணைந்து அவரை வரவேற்றார்.
பிரதம அதிதி அணிவகுப்பு மைதானத்தை வந்தடைந்த பின்னர், அணிவகுப்பை மீளாய்வு செய்யவதற்காக இந்த புதிய பட்டதாரிகளின் மரியாதையை பெறவும் அழைக்கப்பட்டார். பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 62 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர, 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ ஆகியோர் கலந்துகொண்டு பாடநெறியை வெற்றிகரமாக முடித்த புதிய மாணவர்களுக்கு சின்னங்களை அணிவித்தனர்.
2 மாத கால எயார் மொபைல் பயிற்சி வகுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்படி, சிறந்த மாணவர் மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருந்தினை முதலாவது விஜயபாகு காலாட்படை படையணியின் கோப்ரல் ஆர்.டி.பி பிரியங்கரவும், 3 வது கஜபா படையணியின் சார்ஜென் ஆர்.பி.டி.நந்தசிறி சிறந்த உடற் பயிற்சி மாணவருக்கான விருதினை பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து புதிதாக வெளியேறிய எயார் மொபைல் சிப்பாய்கள் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
படையினர் எயர் மொபைல் பாடத்திட்டத்தில் புதிதாகப் பெற்றுக் கொண்ட திறன்களைக் கொண்டு கைக்கு கை சண்டை, ஆயுதங்களை பொருத்திதல் மற்றும் பிரித்தெடுத்தல், பாய்தல், ஆகிய தமது திறமைகளை வெளிப்படுத்தி இந்த நிகழ்வினை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினர். இலங்கை சிங்க படையணி, கெமுனு ஹேவா படையணி, கஜபா படையணி மற்றும் விஜயபாகு காலாட்படை படையணியின் இசைக்குழுவும் இடம்பெற்றன.
எயார்மொபைல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபத் சஞ்சீவ, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்க நடைபெற்ற தின விழாவைக் கண்டுகளித்தனர்.