27th February 2022 18:56:33 Hours
64 வது படைப்பிரிவின் 643 வது பிரிகேடினரால் தடியமலை கிராமசேவை பிரிவுக்குட்பட்ட பெரியசம்பலன் கிராமத்தில் உள்ள ‘ஜன’ முன்பள்ளியில் உள்ள 14 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை (22) ஆடம்பரமான மதிய உணவு வழங்கப்பட்டது.
643 வது பிரிகேடின் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி இந்த விருந்தினை உன்னிப்பாகக் கண்காணித்து கலந்து கொண்டார். முன்பள்ளியில் இருந்த சிறுவர்களில் பலர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க , 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் மற்றும் 643 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டிரால் டி சில்வா ஆகியோர் இந்த திட்டத்திற்கு தங்களது ஆசீர்வாதங்களை வழங்கினர்.
இந்த சமூக நலன் திட்டத்தில் சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.