Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2022 17:00:26 Hours

மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து போட்டியில் இராணுவ கரப்பந்து வீரர்கள் இரண்டாம் இடம்

மத்திய ஆசிய வலய கரப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை இராணுவக் கரப்பந்து அணியானது பெப்ரவரி 18 - 20 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இலங்கை உட்பட மத்திய ஆசியாவில் உள்ள ஐந்து நாடுகளின் 9 கரப்பந்து அணிகள் மூன்று நாள் கொண்ட போட்டியில் பங்கேற்றன, இதில் இராணுவ கரப்பந்து அணி ஈரான், பாகிஸ்தான், மாலைத்தீவு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அனைத்து தேசிய அணிகளையும் ஆரம்ப சுற்றில் தோற்கடித்து ஈரான் அணியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில், ஈரான் அணியில் உள்ள போட்டியாளர்களுக்கு எதிரான கடுமையான மோதலுக்குப் பிறகு, ஈரான் அணி வெற்றிபெற்றதுடன் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

போட்டியில் இலங்கை இராணுவ அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் எஸ்.எஸ்.எம் பிரனாந்டோ மற்றும் சிப்பாய் எம்.எச்.எ.எஸ் தர்மபால ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதிப் போட்டியை இலங்கை இராணுவ கரப்பந்தாட்டக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன, இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் சிரேஷ்ட உப தலைவர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட விளையாட்டு ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வீரர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இராணுவ கடற்கரை கரப்பந்தாட்ட வீரர்களுக்கு அனைத்து ஊக்குவிப்பு மற்றும் வசதிகளையும் வழங்கினார்.