25th February 2022 20:30:29 Hours
கிழக்கில் முகாம்களில் அமுல்படுத்தப்படும் சேதன பசளை உற்பத்தி செயன்முறைகளை ஆய்வு செய்வதற்கும், அறிவுறுத்துவதற்கும் மற்றும் மதிப்பீடு செய்வதற்கும் ஏனைய நலன்களை விசாரிப்பதற்கும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (25) கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின் போது. ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சேருவில மங்களராம ரஜ மகா விகாரைக்கு அதன் பிரதம தேரர் வண. அலுதேனியே சுபோத தேரரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
புனித வளாகத்தை வந்தடைந்தவுடன் இராணுவத் தளபதி ‘அடபிரிகர' தானம் வழங்கி வணக்கம் செலுத்தினார். பிரதம தேரர் ஆசீர்வதிக்கப்பட்ட நூலைக் கட்டியதுடன் சிறிய ஆசி உரை ஒன்றை ஆற்றியதன் பின்பு போ மளுவவிற்கு இராணுவத் தளபதியை அழைத்து ஆசீர்வாதங்களையும் வழங்கினார். பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் விகாரை அபிவிருத்தி, விவசாயப் பிரச்சினைகள் மற்றும் விவசாய நடைமுறைகள் தொடர்பான விசேட கவனத்துடன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்கையில் பெரும் போக பருவத்திற்கான சேதன பசளை உற்பத்திற்காக அருகிலுள்ள பகுதிகளில் இருந்து மூலப்பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இராணுவத் தளபதி, பிக்குகள் மற்றும் உடன் வந்திருந்த கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, பிக்குகள் 'செத்பிரித்' பராயணம் ஓதத் தொடங்குவதற்கு முன்னர் புத்தருக்கு மலர் தட்டுகள் மற்றும் 'கிலன்பச' ஆகியவற்றை சமர்ப்பித்து சமய வழிபாடுகளை மேற்கொண்டார்.
கவண் திஸ்ஸ (கி.மு. 2ஆம் நூற்றாண்டு) மன்னரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சேருவில விகாரை புத்தரின் தந்த தாது மற்றும் புனித நெற்றி எலும்பு பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள இப்பகுதி மகாவலி கங்கையின் ஒரு பரந்த சதுப்பு நிலமாக இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 1922 ஆம் ஆண்டு தாது கோபுரம் வண. தம்பகசரே சுமேதங்கர தேரர் அவர்களால் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. மறைந்த துறவி, 1931 இல் பாதுகாப்பு தூபியைச் சுற்றி இருக்கும் பழங்கால கட்டமைப்புகளை பயன்படுத்தி தூபியை மீட்டெடுத்தார்.