02nd March 2022 19:58:23 Hours
எமது புராதன கால அரசகுடிகளின் ஆட்சியின் பின்னர் முதன் முறையாக அநுராதபுரம் மானிங்கமுவ பிரதேசத்தில் தந்திரிமலை வீதியில் இன்று (26) காலை 20,000 க்கும் அதிகமான பக்தர்கள் வருகைதந்த வேளையில், இயல்புடைய மற்றும் யதார்த்தத்தில் பிரத்தியேகமாக காட்சியளிக்கும் முகமாக. மகா சங்க உறுப்பினர்கள், கௌரவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன், கஜபா படையணியின் தலைமையகப் படையினர் மற்றும் சிறுவர்கள் இணைந்து கம்பஹா பவுன் பெல்லஸ்ஸ விகாரை மணிங்கமுவ விகாரை கிளைக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான மல்லிகை செடிகளை நட்டனர்.
புகழ்பெற்ற தியான பயிற்சியாளரும் கம்பஹா பவுன் பெல்லஸ்ஸ விகாரையின் பிரதமகுருவுமான வண. வல்பொல கோதம தேரரால் முன்வைக்கப்பட்ட இந்த 'பிச்சவனே மஹா புஷ்ப உத்யானய' (மல்லிகை தோட்டம்) எனும் திட்டத்திற்கு நெத் வானொலி இணை அனுசரணை வழங்கியது. அனுராதபுரத்தில் உள்ள மிகவும் புனிதமான ருவன்வெளி மஹா சேயாவை வழிபடுவதற்காக பிக்குகளுக்கு மல்லிகை மலர்களை தினசரி இடையூறு இல்லாமல் வழங்குவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புராணக்கதை கூறுவது போல் இந்த நடைமுறை அரச காலத்தில் இருந்துள்ளது இது போன்ற திட்டங்கள் காணப்பட்டதுடன் இந்த நோக்கத்திற்காக பிரத்தியேகமாக "புஷ்ப உத்யனாயா" வடிவத்தில் சமகாலங்களில் இந்த வகையான முயற்சி புத்துயிர் பெற்றது இதுவே முதல் முறையாகும்.
சமய மத அனுஷ்டானங்களுக்கு பிறகு 5000 மல்லிகை நடும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா, மகா சங்க உறுப்பினர்கள், கௌரவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, நெத் எப்.எம் வானொலியின் தலைவர், உரு வாரியே வன்னில அத்தோ (வேடுவர் தலைவர்) ஆகியோர் இணைந்து முதல் சில செடிகளை நட்டனர். இந்நிகழ்வில் கஜபா படையணியின் படையினர் மற்றும் அங்கு குவிந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின் படி நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது புராதன நகரமான அனுராதபுரத்தில் முதன்முதலாக ஸ்தாபிக்கப்பட்ட பூந்தோட்டம் இதுவாகும் என்று இத்திட்டத்தை கௌரவ அமைச்சர் பாராட்டினார்.
தளபதியின் அறிவுறுத்தலின்படி, நெத் எப்எம் வானொலியின் அனுசரணையுடன் தொழில்நுட்ப தேவைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்த பின்னர் கஜபா படையணியின் படையினர் இந்த செடிகளை முழுமையாக வளரும் வரை பராமரிப்பார்கள்.
இந்த நிகழ்வின் போது இராணுவத் தளபதி அங்கு இருந்த துறவிகள் மற்றும் பூர்வீக சமூகத்தின் தலைவர்களுடன் சில யோசனைகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் இந்த திட்டம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் தந்திரிமலே ராஜமஹா விகாரையின் அதிபதியான வண. தந்திரிமலே சந்திர ரத்தின நாயக்க தேரர், நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையம் மற்றும் குரகல மடாலயத்தின் அதிபதி வணி. வத்துரகும்புரே தம்மரதன தேரர், புதிய பிக்குகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட பௌத்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.