Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2022 19:27:18 Hours

66 வது படைப்பிரிவு கைப்பந்து, ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன்கள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைப்பிரிவுகளுக்கிடையிலான ஸ்குவாஷ் மற்றும் கைப்பந்து கடந்த இரண்டு வாரங்களில் அந்தந்த படைப்பிரிவு மற்றும் பிரிகேட் மட்டங்களில் போட்டிச் சுற்றுகள் இடம்பெற்றதுடன் அதன் இறுதிப் போட்டிகள் 19 பெப்ரவரி 2022 முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றன.

பிரிவுகளுக்கிடையேயான ஸ்குவாஷ் இறுதி போட்டியில் 64 வது படைப்பிரிவு அணிக்கும் 66 வது படைப்பிரிவு அணிக்கும் இடையே நடைபெற்றது. கடும் போட்டியினை அடுத்து 66 வது படைப்பிரிவின் அணி சாம்பியன் ஆனது. மேலும் 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்கள் படைப்பிரிவுகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

படைப்பிரிவுகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தனவிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, படைப்பிரிவுகளுக்கிடையிலான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் 64 வது படைப்பிரிவு அணிக்கும் 66 வது படைப்பிரிவு அணிக்கும் இடையில் இடம்பெற்றதுடன், ஸ்குவாஷிலும் 66 வது படைப்பிரிவின் அணி சம்பியனானது.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன், இரண்டு போட்டிகளையும் ஒழுங்கமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். மேலும் பரிசளிப்பு விழாவின் போது பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய ரணசிங்க கலந்துக்கொண்டு படைப்பிரிவுகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியின் சிறந்த பந்து ஒழுங்குப்படுத்தும் வீரருக்கான பரிசுக் கிண்ணத்தை 66 வது படைப்பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் எம்.ஜெயசிங்கவுக்கும், படைப்பிரிவுகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டியின் சிறந்த அறைதல் வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை 66 வது படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.நிலங்கவுக்கும் வழங்கி வைத்தார்.

படைப்பிரிவுகளுக்கிடையேயான கரப்பந்து போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசுக் கிண்ணத்தை 66 வது படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் எச்.எ.எஸ்.எஸ் பெரேரா பெற்றார். படைப்பிரிவுகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியின் சம்பியன்ஷிப் கிண்ணத்தை 66 வது படைப்பிரிவின் கரப்பந்தாட்ட அணியின் தலைவர் சார்ஜென்ட் கே.ஜெயசிங்க பெற்றுக்கொண்டார்.