Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2022 19:23:04 Hours

எலியகந்த மோட்டார் குரோஸ் போட்டியில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் வீரர் இரண்டாவது இடம்

தெற்கு 'எலியகந்த ஸ்பீட் ஹில் க்ளைம்ப்' மோட்டார் குரோஸ் நிகழ்வின் 26 வது போட்டியானது பெப்ரவரி 19-20 திகதிகளில் மாத்தறை - எலியகந்த மோட்டோ குரோஸ் தளத்தில் நடைபெற்ற எஸ்எம் – சுப்பர் மோட்டார் 250/450 சீசீ (SM-Super Motard 250/450 cc) போட்டியில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ.அயி மதுரங்க இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

‘எலியகந்த ஸ்பீட் ஹில் க்ளைம்ப்’ மோட்டார் குரோஸ் 26 வது நிகழ்வினை இலங்கை ஓட்டோமொபைல் விளையாட்டு கழகம், தெற்கு மோட்டார் கழகம் இணைந்து ஏற்பாடு செய்தன.

போட்டி நிகழ்வில் 13 மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் மற்றும் 15 மோட்டார் கார் போட்டியாளர்கள் 600 மீ பாதையை உள்ளடக்கியதுடன், 120 ஓட்டுநர்கள் மற்றும் 94 இராணுவ ஓட்டுநர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.