25th February 2022 19:39:38 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் படையினர் சனிக்கிழமை (19) 22 வது படைப் பிரிவின் தலைமையக வளாகத்தில் படையினரால் தயாரிக்கப்பட்ட 40 தொன் (48339 கிலோ) எடையுள்ள சேதன பசளைகளை அரசாங்கத்திற்குச் சொந்தமான லக் போஹோர நிறுவனத்திடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை உரக் கம்பனியின் மாவட்ட சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியான ஆர்.எம்.டி.ரத்நாயக்கவிடம் உரங்களை அடையாளப்பூர்வமாக கையளித்தார். மேலும் படையினர் இந்த முயற்சியை சோதனை அடிப்படையில் மேற்கொண்டனர்.
22 வது படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார, 221, 222 மற்றும் 223 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், உரக் கம்பனி நிறுவன அதிகாரிகளை திங்கட்கிழமை (21) கோதமீகம படையலகு தலைமையக வளாகத்திற்கு அழைத்து இராணுவத்தால் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 கிலோகிராம் சேதன பசளையை இலங்கை உரக் கம்பனி நிறுவனத்திடம் கையளித்தனர்.
141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 20 வது இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் சேதன பசளைகள் பதப்படுத்தப்பட்டதை. 20 வது இலங்கை இராணுவ சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் U.A திலகசிறி இந்த திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.
20 வது இலங்கை இராணுவ சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, சிப்பாய்கள் மற்றும் 'சிலோன் பெர்டிலைசர் கம்பெனி லிமிடெட் (லக் போஹோர) இன் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அதேபோன்று, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்கள் அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட 51 தொன் சேதன பசளைகளை பெப்ரவரி பொத்துவில் 23 வது இலங்கை சிங்க படையணி 19 ஆம் திகதி இலங்கை லக் போஹோர உர நிறுவனத்திடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம கலந்து கொண்டதுடன். 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ், 23 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இலங்கை உரக் கம்பனியின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.