25th February 2022 19:31:02 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர புதன்கிழமை (23), இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 18 வது பணிப்பாளராக இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.
இதன் போது மத அனுஷ்டானங்களுக்குப் மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணிப்பாளர் அதிகாரப்பூர்வமான ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்க இப்போது மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து இவர் இந்நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் ரஞ்சித் ஜயசேகர தனது புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவ வழங்கள் பாடசாலையின் தளபதியாக கடமையாற்றினார்.