Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2022 20:50:27 Hours

இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலைக்கு மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய முதல் விஜயம்

இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் எச்.ஏ கீர்த்திநாதா அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய தியத்தலாவ தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலைக்கு தனது முதல் முறையான விஜயத்தை 2021 பெப்ரவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.

வருகை தந்த மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களை தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் எச்.ஏ கீர்த்திநாதா அவர்கள் அன்புடன் வரவேற்ற பின்னர், தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

நேரடி ஆட்சேர்ப்பு தொழிலாண்மை பயிலிளவல் பாடநெறி எண். 11 நிறைவு விழாவில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதை அடுத்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த பயிளிவல் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் புதிதாக நிறைவு பெற்ற நேரடி ஆட்சேர்ப்பு தொழிலாண்மை பயிளிவல் அதிகாரிகளினால் உருவாக்கப்பட்ட விளக்கக்காட்சியை தளபதி நேரில் பார்வையிட்டார்.

பின்னர், தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் எச்.ஏ கீர்த்திநாதா இந்நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பயிற்சிப் பாடசாலையின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தற்போதுள்ள நிர்மாண பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் நிஹால் சமரவிக்ரம, முதன்மை பணி நிலை அதிகாரி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.