01st March 2022 08:36:03 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது இன்று (25) காலை கிண்ணியா 6 வது இலங்கை கவச வாகனப் படையணிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்தச் விஜயத்தின் போது இராணுவத் தளபதி முகாமின் அனைத்து நிலையினரின் சமையலறை, தங்குமிடம், சுகாதாரத் தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை உன்னிப்பாகக் கவனித்துடன், சிப்பாய்களின் தேவைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.
இராணுவத் தளபதி படையினரின் நலன்களை பார்வையிட்டதுடன் முகாமில் உள்ள இராணுவத்தினருடன் உரையாடினார். மேலும் முகாமின் கட்டளை அதிகாரி இந்த விஜயத்தின் போது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து தளபதியிடம் விளக்கினார்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார, அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் லால் விஜேதுங்க மற்றும் 223 வது பிரிகேட் தளபதி கேணல் ரவீந்திர ஜயசிங்க ஆகியோர் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.