Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2022 19:34:30 Hours

23 வது விஜயபாகு காலாட் படையினர் பாடசாலை மாணவிக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 642 வது பிரிகேடின் 23 வது விஜயபாகு காலாட் படையினர் வெளிநாட்டில் வசிக்கும் சிரேஷ்ட அதிகாரியொருவரின் அனுசரணையுடன் மணவாளப்பட்டமுறிப்பு அம்பகாமம் பகுதியில் வசிக்கும் ஏழை பாடசாலை மாணவிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை 19 பெப்ரவரி 2022 அன்று நாட்டி வைத்துள்ளனர்.

பாடசாலை அதிபரின் ஆலோசனைப்படி அனுசரணையாளரின் நிதியுதவியுடன் கறிப்பட்டமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் ஏழை பாடசாலை மாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஆர்.ரத்னசிங்கம் அவர்களின் அனுசரணை மூலம், “இதயம் கொண்ட இராணுவம்” எனும் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கும் படையினர் இந்த சமூகம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரக்கோன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அம்பாகாமத்தில் அதன் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் 3 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெற்றது.