Header

Sri Lanka Army

Defender of the Nation

24th February 2022 15:40:54 Hours

தேவாலய திறப்பு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு படையினரால் போக்குவரத்து வசதிகள்

இரணைப்பாகுளம் புனித அந்தோனியார் தேவாலய குருமார்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஞாயிற்றுக்கிழமை (20) இரணைப்பாகுளம் புதிய தச்சனாமரதமடு தேவாலயத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு 65 ஆவது படைப்பிரிவின் 653 வது பிரிகேட் படையணியினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

புனித அந்தோனியார் தேவாலய வளாகத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தேவாலாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு இராணுவப் பேருந்துகள் வழங்கப்பட்டன. 65 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி மற்றும் 653 ஆவது பிரிகேட் தளபதி கேணல் நாமல் சேரசிங்க ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா காணும் தேவாலய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு படையினருக்கு பணிப்புரை விடுத்தனர்.

அந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து வசதியின் போது 653 ஆவது பிரிகேட்டின் ஓர் அதிகாரி 06 சிப்பாய்களுடன் குறித்த பக்தர்களின் தேவைகளை கவனித்துக்கொண்டனர்.