24th February 2022 15:40:55 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் 522 வது பிரிகேடின் 15 வது (தொ) கஜபா படையணியின் நல்லுள்ளம் கொண்ட சிப்பாய் ஒருவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு அருகில் புதன்கிழமை (23) துவிச்சக்கர வண்டி ரோந்துப் பணியொன்று மேற்கொண்ட வேளையில் வீதியில் காண்டெடுக்கப்பட்ட பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பணப்பையினை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
வல்வெட்டித்துறை, இத்தியடியைச் சேர்ந்த திரு.செல்வராஜா மதன் என்பவருக்குச் சொந்தமான ரூபா 24,955/= பணம், இரண்டு வங்கி அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி அட்டை என்பன அடங்கிய பணப்பையினை 15 வது (தொ) கஜபா படையணியின் பணிநிலை சாஜன் திஸாநாயக்க என்பவர் கண்டெடுத்துள்ளார். 52 வது படைப்பிரிவின் தளபதிமேஜர் ஜெனரல் சமந்த விக்ரமசேன மற்றும் 15 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் பணிப்புரையின் பேரில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதன் உரிமையாளர் பற்றிய தகவலைக் கண்டுபிடித்ததுடன் பணிநிலை சாஜன் கே.ஏ.ஜே. திஸாநாயக்க, அனைத்து பெறுமதியான பொருட்களுடன் பணப்பையினை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
பணப்பையின் உரிமையாளர், சிப்பாயின் முன்மாதிரியான செயலை பாராட்டியதுடன், அப்பகுதி குடிமகனிடம் அவர் காட்டிய அக்கறைக்கும் நன்றி தெரிவித்தார்.