Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2022 15:00:38 Hours

கொமாண்டோ படையணியின் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற சாகச காட்சிகள்

ஊவா-குடாஓயா கொமாண்டோ படையணியின் பயிற்சிப் பாடசாலையில் 157 கொமாண்டோக்களைக் கொண்ட குழுவினரின் வெளியேற்ற நிகழ்வில் அவ்வீரர்களினால் துப்பாக்கி சுடும் காட்சிகள், உண்மையான சண்டை நுட்பங்கள், விஐபி பாதுகாப்பு காட்சிகள், பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு காட்சிகள், துப்பாக்கிச் சூடு காட்சி, மேன் மற்றும் மேன் துப்பாக்கிச் சூடு காட்சிகள், கே9 (போர் நாய்கள்) - கையாளுதல் காட்சி மற்றும் பரசூட் காட்சிகள் என்பன அரங்கேற்றப்பட்டன. இந்த சாகச காட்சிகளானது அவர்களின் துணிச்சலான திறமைகளை வெளிப்படுத்துபவையாக அமைந்திருந்தன.

நாய்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் 10,000 அடிக்கு மேல் உயரத்தில் இருந்து பரசூட் பாயும் காட்சிகள் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பார்வையாளர்களின் இதயங்களையும் மனதையும் கொள்ளையடித்து, அவர்களின் கவனத்தை ஈர்த்தது.(மேலும் விவரங்களுக்கு தனிக் கதைகளைப் பார்க்கவும்)