Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2022 18:00:28 Hours

'சூழலியல் மிதக்கும் தீவுகள்' இராணுவம் மற்றும் பாதுகாப்பு தலைமையக நுழைவாயில் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது

இராணுவத் தளபதியின் "துரு மிதுரு-நவ ரடக்", திட்டத்தின் கீ்ழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபை சந்தி மற்றும் இராணுவத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகங்களுக்கு இடையிலான வீதியை ஒட்டியுள்ள பகுதிகள் சூழலுக்கு உகந்த வகையிலான ஈரநிலங்கள், நடைபாதைகள், சிறுவர் பூங்கா மற்றும் நெற்செய்கை வயல் நிலங்கள் ஆகியவையாக மாற்றப்பட்டுள்ளதுடன் இதன் மற்றுமொறு அழகுபடுத்தும் திட்டமாக நீர் மாசடைதலை குறைக்கும் வகையில், கழிவுநீரை சுத்திகரிக்கவும், கழிவுநீரின் வாசனையை குறைக்கவும், நீர்வாழ் விலங்குகள் மற்றும் நீர்ப்பறவைகளுக்கு தகுந்த வசிப்பிடத்தை வழங்க கூடிய வகையில் மேற்பரப்பில் மிதக்கும் “200 சுற்றுச்சூழல் மிதக்கும் தீவு திட்டம் இன்று (22) காலை ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மரநடுகை, மற்றும் அழகுபடுத்தும் செயற்திட்டத்தின் மூலம் வீதியின் கரடுமுரடான மற்றும் தரிசு பாதைகளை பயன்பாட்டு நிலைக்கு மாற்றுவதற்கு காரணியாக இருந்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இராணுவ வழங்கள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோனின் அழைப்பின் பேரில் ஈரநில தாவரங்கள் மற்றும் நீர்க்குழாய் தாவரங்கள் உள்ளடங்களான மிதக்கும் தீவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டார்.

நீர் தோட்டத்தின் அழகியல் மற்றும் ஓய்வு சுற்றுலாவுடனான இயற்கை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட குறைந்த செலவிலான நீர் மாசுபடுத்தல் தீர்வு திடடத்திற்கான ஆலோசனையானது புகழ்பெற்ற சூழலியல் நிபுணர் திருமதி ரனோஷி சிறிபால அவர்களினால் வழங்கப்பட்டது.

பீவீசி குழாய்கள், மூங்கில் மற்றும் பஞ்சு மெத்தைகள் ஆகியவற்றை மிதக்கும் உபகரணங்களாக பயன்படுத்தி கன்னாஸ், சவந்தாரா மற்றும் ஹெலிகோனியா போன்ற தாவரங்களை நட்டு பரீட்சாத்தித்தவேளை அது வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதுடன் மேலும் மிதக்கும் ஈரநிலங்கள் தண்ணீரில் கொண்டு செல்லப்படும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, நுளம்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என குறித்த நிபுணர் கண்டரிந்துள்ளார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 144 வது பிரிகேடின் கீழுள்ள 12 வது கஜபா படையணி மற்றும் 2வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையின் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 144 வது பிரிகேட் தளபதி கேணல் விந்தன கொடிதுவாக்கு அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டம் அன்றைய பிரதம அதிதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா (ஓய்வு) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுற்றுச்சூழல் மிதக்கும் தீவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் அவர் சில மாதங்களுக்கு முன்பு அதிமேதகு ஜனாதிபதியின் ஆசீயுடன் இத் திட்டத்தை பீரா ஏரியில் தொடங்கினார்.

பொறியியளாலரும் சூழலியலாளருமான திருமதி ரனோஷி சிறிபால,திருமதி இசுரி தர்மசோம (சுற்றுச்சூழல் விஞ்ஞானி) ,பி.டி.சி. குமார (சிரேஷ்ட பொறியியலாளர்),ஹிரந்த டி சில்வா (பொறியியல் உதவியாளர்), சம்பத் தஹநாயக்க (மேற்பார்வையாளர்), இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, இலங்கை இராணுவத் தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இராணுவச் செயலாளர் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி, பணி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். .