Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2022 05:53:51 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையின் புதிய பிரதி தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவ தொண்டர் படையின் புதிய பிரதித் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நிஹால் சமரவிக்ரம அவர்கள் கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தில் திங்கட்கிழமை (21) காலை நடைபெற்ற நிகழ்வின் போது தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அங்கு வருகை தந்த புதிய பிரதி தளபதிக்கு தலைமையக வளாத்தில் இராணுவ சம்பிரதாய இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

புதிய இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதியவர்கள் மதச் சடங்குகள் மற்றும் மஹாசங்கத்தின் ' செத் பிரித்' பரயாணங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவ தொண்டர் படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதிய பிரதி தளபதி உரையாற்றினார்.

இதனைத் தொடர்து பிரதி தளபதியாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் நிஹால் சமரவிக்கிரம, நினைவம்சமாக படை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.