Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2022 09:17:38 Hours

‘இதயமுள்ள இராணுவதினால்' நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு பன்முக நலன்புரி திட்டங்கள்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள தகுதியான சமூகத்தினருக்கு கண்ணாடிகள், சூரிய ஔி மின்சார உபகரணங்கள் (solar panels), விவசாயம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் சமூகம் நலன்புரி செயற்திட்டம் ஒன்று சனிக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதற்கான அனுசரணையானது இராணுவத்தினர், மனுசத் தெரன நிகழ்ச்சி மற்றும் அனுராதபுரத்தில் உள்ள சுவ சாந்தி வைத்தியசாலை ஊடாக வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் வசிக்கும் பார்வையற்ற 550 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்களின் பொருளாதார நெருக்கடிகளை போக்குவதற்கும், அவர்களின் செலவுகளை குறைக்கும் முகமாகவும் அப்பிரதேசங்களில் நடமாடும் கண் சிகிச்சை திட்டம் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பன்முகத் திட்டம், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தற்போதைய “இராணுவ முன்நகர்விற்கான வியூகம் 2020-2025” திட்டத்திற்கு இணங்க 'இதயம்' கொண்ட இராணுவம் அமைப்பாக தகுதியுள்ள மக்களின் நலனில் இராணுவத்தின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், பொது நலத் திட்டங்களை மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ‘தெரண’ தொலைக்காட்சியின் ‘மனுசத் தெரண’வினால், படையினருடன் இணைந்து தொலைதூரப் பிரதேசங்களில் மின்சாரம் இன்றி இருக்கும் பிரதேசத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக சூரிய ஔி மின்சார உபகரணங்கள், மின் பிரப்பாக்கி இயந்திரங்கள் (power generators) மற்றும் பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள் என்பனவற்றை வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால தனது படையினருடன் தமது சொந்தப் செலவில் 100 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார். இதேவேளை தென்னங்கன்றுகளை வளர்ப்பதை ஊக்குவிக்கும் முகமாக பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கு 50 தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

57 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, ஆகியோர் இணைந்து பிரதேசங்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு அந்த நலன்புரி நடவடிக்கைளை முன்னெடுத்தனர்.

இராணுவத்தின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி சமூகத்தினரின் பொருளாதார சிரமங்களை சமாளிக்க உதவும் நோக்கத்துடன் அந்த சமூக திட்டங்களை ஒழுங்கமைப்பதில் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 57 வது படைப்பிரிவின் 14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் முக்கிய பங்காற்றினர்.

இந்த திட்டங்களுக்குத் தேவையான சிற்றுண்டி உட்பட அனைத்து வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள படையினரால் ஏற்பாடுசெய்யப்பட்டன. வழங்கப்பட்டன.