Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2022 18:16:32 Hours

பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் இணைந்து CISM தின ஓட்ட நிகழ்வில் பங்கேற்பு

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, உலகளாவிய நிகழ்வுக்கு இணையாக இலங்கையிலும் ' CISM தின ஓட்ட' நிகழ்வு இன்று (20) காலை கொழும்பில் ஆரம்பமானது. விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும் அனைத்து விளையாட்டு சமூகங்களையும் ஒன்றிணைப்பதனையும் நோக்கமாகக் கொண்ட இந்த CISM நாள் ஓட்டத்தில்' பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), மற்றும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் ஆகியோர் இணைந்து பங்குகொண்டனர்.

2006 ஆம் ஆண்டு CISM ஓட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டவாறு இந்த நிகழ்வானது விமானப்படை தலைமையக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, காலி முகத்திடலுக்கு நடந்து சென்று அதே பாதையில் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போதிலிருந்து முப்படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி அடிப்படையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றன என்பதுடன் இந்த சிறப்பு நாள் ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் CISM இன் மகுடவாசகமான 'விளையாட்டு மூலம் நட்பு' என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது. மேலும் சக்கர நாற்காலியில் பயணித்த பல போர்வீரர்கள் உட்பட ஏனைய முப்படை சேவையாளர்களின் பெரும் கூட்டத்தின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான நிகழ்வானது இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருகைதந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) அவர்களை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுடன் இணைந்து வரவேற்றார்.

1948 ஆம் ஆண்டில், பிரான்ஸ் படைத் தலைவர் ஹென்றி டெப்ரஸ் அவர்கள் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் இராணுவங்களுடன் இணைந்து பிரான்சில் உள்ள நைஸில் 'Conseil International du Sport Militaire' (CISM) என்ற அமைப்பை விளையாட்டின் மூலம் ஆயுதப்படைகளுக்கு இடையே அமைதியை மேம்படுத்துவதற்கான சிறந்த நோக்கத்துடன் நிறுவினார்.