Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2022 18:16:31 Hours

இலங்கை விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் அடிப்படை “இயற்கை விவசாயம்” பாடநெறி முடிவு

2 வது (தொ) இலங்கை விவசாய மற்றும் கால்நடைப் படையணியினால் கரந்தெனியவில் நடாத்தப்பட்ட ஒரு மாத கால அடிப்படை விவசாய பாடநெறி இலக்கம் – 2 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி முடிவடைந்ததுடன் இந்த நிறைவு விழாவானது இலங்கை விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பந்துல லியனகே தலைமையில் நடைபெற்றது.

2 பெண் அதிகாரிகள் மற்றும் 29 பெண் சிப்பாய்கள் கொண்ட ஒரு குழு பாடநெறியை வெற்றிகரமாக முடித்து, பிரதம விருந்தினரிடம் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இயற்கை வேளாண்மை, மேடைப் பயிர்ச் செய்கை , உணவுப் பாதுகாப்பு, இயந்திரங்கள், கால்நடை பராமரிப்பு, பெறுமதி சேர் கால்நடைத் தீவனப் பொருட்கள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்ட செயல்முறைகள் இப் பாடத்திட்டத்தில் அடங்கும்.

அவர்களின் திறமைகளை மேலும் வெளிப்படுத்தும் வகையில், பாடநெறியில் கலந்து கொண்டவர்களிடையே குழு விளக்கப் போட்டியும் தொடங்கப்பட்டது. அதன்படி, பாடநெறியின் முடிவில் ஐந்து குழுக்கள் போட்டியில் பங்கேற்றியது. இந்நிகழ்வில் 2 வது (தொ) இலங்கை விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் W.A.N.D ஜெயசுந்தர அவர்களும் பங்குபற்றினார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு:

முதலிடம் – சிப்பாய் T.M.A.M தென்னகோன்

இரண்டாவது இடம் - சிப்பாய் T.M.T.S பெரிஸ்

மூன்றாமிடம் - சிப்பாய் R.M.M.M ராஜகருண

சிறந்த விளக்கக் குழு

இரண்டாவது லெப்டினன் R.D.A மதுபாஷினி

சிப்பாய் H.P.Y சஞ்சீவனி

சிப்பாய் W.H.S தர்மகீர்த்தி

சிப்பாய் S.A.D மெண்டிஸ்

சிப்பாய் B.C.H சாந்தா

சிப்பாய் D.D.D விஜேசூரிய