Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2022 18:16:30 Hours

முல்லைத்தீவு படைப் பிரிவுகளுக்கு இடையேயான கூடைப்பந்து இறுதிச் சுற்று

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படைப் பிரிவுகளுக்கிடையேயான கூடைப்பந்து சம்பியன்ஷிப்-2022 இன் இறுதிப் போட்டிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் திங்கட்கிழமை (14) ஆரம்பமாகின.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதிப்போட்டிகளை பார்வையிட்டார். கடுமையான போட்டிகளுக்கு பிறகு, 64 வது படைப் பிரிவு வீரர்கள் இந்த ஆண்டு சாம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

68 வது படைப் பிரிவு இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் இந்த நிகழ்வின் சிறந்த வீரராக 23 வது விஜயபாகு காலாட்படையணியின் பதவி நிலை சார்ஜன் பீஎம்ஏ புஷ்பகுமார விருது பெற்றார்.

64 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகளை உன்னிப்பாகக் கண்காணித்தார். பிரதம அதிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.