Header

Sri Lanka Army

Defender of the Nation

15th February 2022 17:18:51 Hours

24 வது படை பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீ்ழ் இயங்கும் 24 வது படை பிரிவு தலைமையகத்தின் 12 வது தளபதியாக பிரிகேடியர் சாலிய அமுனுகம வியாழக்கிழமை (10) அன்று அப்படைத் தலைமையகத்தில் மகா சங்கத்தினரின் ‘செத்பிரித்’ பாராயாணங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

24 வது படை பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றதை குறிக்கும் வகையில் முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புதிய தளபதி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையின் நிறைவில் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் 241 வது பிரிகேட் மற்றும் 242 வது பிரிகேட் தளபதிகள், 24 வது படைப் பிரிவின் கீழ் உள்ள கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.