Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2022 09:32:41 Hours

பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தினர் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளின் சேதனை பசளை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல்

பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தினர் பொலன்னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டத்திலுள்ள 10 தனியார் சேதன பசளை உற்பத்தி நிறுவனத்தினர் , மாவட்ட செயலகங்கள், தேசிய உர செயலக மற்றும் ஏனைய நிறுவன பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றை திங்கட்கிழமை (14) நடத்தியிருந்தனர். இச்சந்திப்பில், வரவிருக்கும் சிறுபோக விளைச்சல் காலத்தில் விவசாயிகளுக்கு எவ்வித தடையுமின்றி சேதன பசளை விநியோகத்தினை மேற்கொள்ளுதல் தொடர்பில் கலந்துரையாடினர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு.டபிள்யூ.ஏ. தர்மசிறி, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் திரு.ஜனக ஜயசுந்தர, தேசிய உர செயலக பணிப்பாளர் திரு.சந்தன லொகுஹேவகே, விவசாய இராஜாங்க அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ஹேமந்த விஜேவர்தன, அனுராதபுரம் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி கே.எல்.தேனுவர, பொலன்னறுவை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு ஆர்.பி. உபாலி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான இராணுவ மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், இரு மாவட்டங்களில் உள்ள சஷ்ரீக லங்கா தனியார் நிறுவன பிரதிநிதிகள், எஸ்எம்எஸ் எகோ புரடக்ட்ஸ், ஸ்ரீ பயோ டெக், எகோ பயோ கொரியா, பயோட்டின், பயோ நேஷனல் புட்ஸ் , லக்கி அக்ரோ, லைவ் லைப், ஆக்ஸ்டார் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் சப்ளை கார்ப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச மற்றும் தனியார் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, இவ்விரு மாவட்டங்களிலும் உற்பத்தி, விநியோகம் மற்றும் இராணுவ ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.

கலந்துரையாடலின் போது, பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடந்த பெரும்போக பயிர்செய்கையில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், சிறுபோக பருவ காலத்தில் தேவையான பசளை உற்பத்திகள் விவசாய சமூகங்களை முன்கூட்டியே சென்றடைவதை உறுதி செய்யுமாறு உர உற்பத்தி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டார்.

தேசிய உர செயலக பணிப்பாளர், விவசாய இராஜாங்க அமைச்சின் ஆலோசகர், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாய பணிப்பாளர்கள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள இராணுவ மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.