13th February 2022 21:51:58 Hours
ஐநா பொதுச் செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதி பிரதிநியும் மாலியில் ஐநா அமைதிகாக்கும் பணிகளின் தலைவருமான திரு எல் - காசிம் வானே அவர்கள், சனிக்கிழமை (12) இடம்பெற்ற மாலியிலுள்ள இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படையினருக்கான உத்தியோகபூர்வ சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் மாலியில் ஐநா அமைதிகாக்கும் தளங்களுக்கான விநியோக செயற்பாட்டில் ஆற்றிவரும் நடவடிக்கைகள் இலங்கை இராணுவ அமைதிகாக்கும் குழுவினர் சிறந்த பங்களிப்புக்களை வழங்கி வருவதோடு, இலங்கை இராணுவ குழுக்கள் ஆற்றி வரும் மாலியில் ஆற்றிவரும் நடவடிக்கைகள் விலைமதிப்பற்றவை என பாராட்டு தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாலியில் ஐநா அமைதிகாக்கும் பணிகளை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பவிருக்கும் இலங்கை குழுவின் மரியாதை அணிவகுப்பில் கலந்துகொண்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஐநா மினுஸ்மா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைதிகாக்கும் குழுக்களின் தளங்களை சென்றடைவதற்கான பாதைகள் மிகவுமும் தூரமானதும் கடினமாதுமாக அமைந்திருந்தாலும் இலங்கை அமைதிகாக்கும் குழுக்களின் பணிகளை அங்கிகரிக்கும் விதமாகவே அவர்களின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் திரு எல்-காசிம் வானே அவர்களின் டுவிட்டர் பதிவிற்கு பின்னூட்டம் ஒன்றை பதிவிட்டுள்ள மாலியில் ஐநா அமைதிகாக்கும் பணிகளின் கிழக்கு பிரிவின் முன்னாள் தளபதி இலங்கை அமைதிகாக்கும் குழு மிகவும் நம்பகமான சிப்பாய்களை கொண்டு செயற்படுவதாகவும் அதனால் ஐநா செயலாளர் நாயகத்தின் விஷேட பிரதிநிதி மேற்கண்டவாறு பதிவிட்டமைக்காக நன்றியும் கூறியுள்ளார்.
தற்போதும், ஜிஹாதி கிளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, இலங்கை இராணுவத்தின் 20 அதிகாரிகளும் 223 சிப்பாய்களும் இப்பணிகளுக்கு பங்களிப்பை வழங்குகின்றனர். 2017 ஆம் ஆண்டு முதல், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவம் மாலிக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பணிகளுக்காக படையினரை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
திரு எல் காசிம் வானே, இலங்கைக்கு விஜயம் செய்த தூதுக்குழுவுடனான சந்திப்பின் போது நிலத்தால் சூழப்பட்ட மாலியில் சேவையாற்றும் இலங்கை இராணுவ அமைதிகாக்கும் பணிக்கான பயிற்றுவிப்பு நிறுவனத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இதன்போது சவாலான சூழலில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வரும் இலங்கை படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
மேற்படி டுவிட்டர் பதிவை கீழே காணலாம்