Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2022 13:02:25 Hours

படையினரால் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு அவரது பாடசாலை வளாகத்தில் வரவேற்பு

பாகிஸ்தான் லாகூரில் அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ்ப் பாடசாலையைச் சேர்ந்த செல்வி கணேஷா இந்திகா தேவியை முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையத்தின் கீழ் உள்ள 59 வது படை பிரிவு தலைமையக படையினர் செவ்வாய்க்கிழமை (1) அவரை வரவேற்று கௌரவித்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம்த்தின் 64 வது படைப் பிரிவின் 642 வது பிரிகேட்டை சேர்ந்த இம்மாணவி 25 இற்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்களுடன் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கும் பாடசாலைக்கும் கௌரவத்தையும் புகழையும் கொண்டு வந்துள்ளார். மாணவி கணேசா இந்திகா தேவியை வரவேற்கும் வகையில் 642 வது பிரிகேட் படையினர் வாகன அணிவகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்து மாணவியின் பாடசாலையான கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ்ப் பாடசாலை வளாகத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 59 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி சூரியபண்டார. பாடசாலை அதிபர், மாணவி கணேசா இந்திகா தேவியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அவருக்கு பல அடையாளப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

642 வது பிரிகேட் தளபதி கேணல் ஜி.டி.எஸ்.எம். அல்விஸின் மேற்பார்வையில் 23 வது விஜயபாகு காலாட்படை படையணியின் படையினர் வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இக் குத்துச்சண்டை போட்டிகள் பாகிஸ்தான் லாகூரில் 2022 ஜனவரி 13 முதல் 19 வரை ஏராளமான குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்ப்புடன் நடைபெற்றது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் வசந்த பாலமகும்புர மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.