Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2022 13:04:25 Hours

இராணுவத்தினரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலை உயர்வுகள்

தாய் நாட்டுக்காக இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசத்தின் 74 வது தேசிய சுதந்திர தினத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அனுமதியுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் 480 அதிகாரிகள் மற்றும் 8034 சிப்பாய்களுக்கான நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 16 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 36 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 50 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும் 207 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 94 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 70 இராண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான 4 பெப்ரவரி 2022 அன்று வழங்கப்படுகின்றது.

ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நான்கு இலக்க நிலை உயர்வுகளை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.

73 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 18 ஓகஸ்ட் 2019 க்குப் பிறகு இன்று வரை 4341 அதிகாரிகள் மற்றும் 86741 சிப்பாய்களுக்கு நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.