02nd February 2022 20:02:15 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் திங்கட்கிழமை (31) பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி பூஸ்டர் தடுப்பூசியை பொது மக்களுக்கு மீண்டும் வழங்குவதற்கு நாடுமுழுவதுமான எட்டு மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி வழங்கல் பணிகளை ஆரம்பித்தது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் அறிவுறுத்தல்களின் படி .கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினர் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள அந்தந்த படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்களைச் சேர்ந்தவர்கள் நடமாடும் தடுப்பூசி மையங்களை நடத்தினர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளை படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்களின் தளபதிகள் படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் அதிக மக்கள் செரிவை கொண்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் இந்த நடமாடும் தடுப்பூசி மையங்களை நடத்துவதை ஒருங்கிணைத்தனர்.
பனாகொட இராணுவத் தள வைத்தியசாலையில் சேவையாற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினரும் தடுப்பூசித் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தனர். நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.