02nd February 2022 20:00:04 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் ‘பசுமை விவசாயம்’ மற்றும் இயற்கை சேதன பசளை விநியோக ஒருங்கிணைப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வெள்ளிக்கிழமை (28) 56 வது படைத் தலைமையக வளாகத்தில் ஆரம்பமானது.
பிராந்தியத்தில் உள்ள 62 விவசாயயிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்குபற்றியதுடன் அங்கு சேதன பசளை உற்பத்தியை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அந்தந்த விவசாய அதிகாரிகளின் ஒத்துழைப்பில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் 56 வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டச் செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர, வவுனியா, மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மகாவலி வலய வதிவிட திட்ட முகாமையாளர், வவுனியா கமநல அபிவிருத்தி நிலையத்தின் உதவி ஆணையாளர் , மாகாண உதவி விவசாயப் பணிப்பாளர், தேசிய உர செயலக உதவிப் பணிப்பாளர், விவசாய ஆலோசகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட இராணுவத்தினரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.